tamilnadu

பாஜக-அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல்! செல்வப்பெருந்தகை விமர்சனம்

பாஜக-அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல்!

செல்வப்பெருந்தகை விமர்சனம்

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன், வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளையொட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந் தகை, “பாஜக, அதிமுக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்து உள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த டிடிவி தின கரன் வெளியே வந்துவிட்டார். ஓபிஎஸ் வெளியே வந்து விட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள்  என தெரியவில்லை. அது மூழ்குகிற கப்பல். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜக, அதிமுக கூட்டணியை ஏற்க  மாட்டார்கள். அது எதார்த்தமான உண்மை. உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பாஜக. எல்லா மாநிலங்களிலும் அவர்களது சித்து விளையாட்டை நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.