சோழவரம் அருகே சாலையை சீரமைக்க கோரி வாழைக்கன்று நடும் போராட்டம்
திருவள்ளூர், செப்.11- சோழவரம் அருகே எடப் பாளையத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுமக்கள் இணைந்து வியாழக்கிழமை (செப்.11) வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்துள்ள அலமாதி ஊராட்சிக்குட்பட்டது எடப்பாளையம் கிராமம். இங்கு 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகள் குண்டும் குழியு மாக சேறும் சகதியுமாகக் காட்சியளித்து வருகிறது. இதனால், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது வாக னங்கள் சிக்கி விபத்துக் குள்ளாக்கி வருகிறது. இந்த கிராம ஊராட்சியில் சில பகுதிகளில் சாலைகள் போடப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்த இலாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையை மட்டும் சீரமைத்து கொடுக்க வில்லை.எனவே, இச் சாலையைச் சீரமைக்க வலி யுறுத்தி வாழைக்கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர்.அப்போது, வட்டார வளர்ச்சி அதி காரிகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டத்திற்குச் சென்றுள்ளதாகவும், செப். 12 அன்று அதிகாரிகளை வரவழைத்து சாலை யைச் செப்பனிட நட வடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உத்தர வாதம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை தற்காலி கமாக கைவிட்டு கலைந்து சென்றனர். வெள்ளிக் கிழமை (செப்.12) காலை சம்பவ இடத்திற்கு அதி காரிகள் வரவில்லை என்றால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என எச்சரித்தனர். இந்த போராட்டத்தில் சிபிஎம் எடப்பாளையம் கிளையின் முன்னாள் செயலாளர் ஏ.குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி.சந்தானம், சோழ வரம் ஒன்றியச் செயலாளர் அ.து.கோதண்டன், ஒன்றியக் குழு உறுப்பினர் டி.சரளா, மூத்த தோழர் பி.நடேசன், கிளைச் செய லாளர் எஸ்.மாடசாமி, நிர்வாகிகள் வி.லோக நாதன், எஸ்.ஆனந்தன், இ.குமார், ஆர்.கபாலி, சசிகுமார், எஸ்.வசந்தி, அலமேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.