சுருக்குமடி வலையை தடை செய்க! தரங்கம்பாடியில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
மயிலாடுதுறை, ஆக.2 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரி வித்து, தரங்கம்பாடி தலைமையி லான மீனவ கிராம மக்கள் சனிக் கிழமை உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. கிராமங்கள் தனித்தனி அணியாக பிரிந்து சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தரங்கம்பாடி தலைமையில் மீனவ கிராமங்கள் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை மற்றும் அதிவேக குதிரை திறன் கொண்ட படகுகளில் எஞ்சின் பயன்படுத்தி வருவதை தடை செய்ய வலியுறுத்தி, மீன வர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். சில மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருவதாக வும் கூறப்படுகிறது. சுருக்குமடி வலை பயன்பாட் டுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரங்கம்பாடி தலைமையி லான மீனவ கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதனிடையே சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம் பாடியில் சாலை மறியல் போ ராட்டம் நடத்தப் போவதாக தரங்கம் பாடி தலைமையிலான மீனவ கிராமங்கள் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்ட தலைமை மீனவர் கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் கொடியம்பாளை யம், பழையாறு, சின்னகொட்டாய் மேடு, தொடுவாய், கூழையாறு, கீழமூவர்கரை, மேலமூவர்கரை, சாவடிகுப்பம், நாயக்கர்குப்பம், வாணகிரி, சின்னமேடு, சின்னங் குடி, தாழம்பேட்டை, புதுப் பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டி யூர், சின்னூர்பேட்டை உள்ளிட்ட 26-க்கும் மேற்பட்ட மீனவ கிரா மங்களைச் சேர்ந்த பஞ்சாயத்தார் கள் மற்றும் மீனவர்கள் தொழில் மறியல் மற்றும் கடை அடைப்பு செய்து உண்ணாவிரதப் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அரசு தரப்பிலான அதிகாரிகள் பங்கேற்று, சுருக்குவலை மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் மீது நட வடிக்கை எடுப்பது தொடர்பான விளக்கத்தை மீனவ கிராம மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில், போராட்ட இடத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார், வட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என்று கூறி னர். இதனால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.