tamilnadu

img

குடவாசல் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

குடவாசல் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

திருவாரூர், செப்.10 - கடந்த செப்.5 ஆம் தேதி சென்னை யில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டாரத்தில் உள்ள அச்சுத மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில  ஆசிரியர் குடவாசல் கே.கே.பி சதீஷ்க்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டாக்டர் இராதா கிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினர். குடவாசலில் இருந்து டாக்டர் இராதா கிருஷ்ணன் விருந்து பெற்ற ஆசிரியர் கே.கே.பி.  சதீஷ்க்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குட வாசலைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ஆசிரி யர்கள் பாராட்டு தெரிவித்தனர்.