tamilnadu

திருச்சி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்  சட்ட நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை

திருச்சி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்  சட்ட நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை, ஆக.26- “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார  பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மேற்கொண்டிருக்கிறார். திருச்சி துறையூரில் நடந்த இந்நிகழ்ச்சி யின் போது, அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீதும், அதில் இருந்த ஓட்டுநர் மற்றும் பெண் ஊழியர்கள் மீதும் தாக்கு தல் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுபோன்ற சம்பவங் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும், மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள 1,330 108 ஆம்புலன்ஸ்கள் தினமும் நூற்றுக்கணக் கான உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. சாலைகளில் ஆம்பு லன்ஸ் வரும்போது வழிவிடுவது உலக மரபு. ஆனால், எதிர்க்கட்சி  தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதுகுறித்து கூட  தெரியவில்லை. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டலாமா?” என்று கேட்டார். “அதன் தொடர்ச்சியாக திருச்சி துறையூரில் ஆம்புலன்ஸ் மீதும், அதிலிருந்த ஓட்டுநர் மற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல்  நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஓட்டுநர்கள், பணியா ளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 10  ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை தூண்டிவிட வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தார்.