tamilnadu

img

விளையாட்டு

ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி இந்திய ஆடவர், மகளிர் கபடி அணிகளுக்கு தங்கம்

3ஆவது சீசன் ஆசிய இளை ஞர் விளையாட்டுப் போட்டி கள் பஹ்ரைன் நாட்டின் தலை நகர் மனமாவில்  நடைபெற்று வரு கிறது. 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் -வீராங்கனைகள் 19 விளையாட்டு களில் போட்டியிடுகின்றனர்.  இந்தியா சார்பில் 119 வீராங்கனை கள் மற்றும் 103 வீரர்கள் என மொத்தம் 222 விளையாட்டு நட்சத்தி ரங்கள் 21 விளையாட்டுகளில் பதக்க வேட்டைக்காக களமிறங்கியுள்ளனர்.  இந்நிலையில், இந்த ஆசிய இளை ஞர் விளையாட்டுப் போட்டியில் இந்தியா கபடி பிரிவில் அடுத்தடுத்து 2 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. ஈரானைச் சாய்த்த ஆடவர் அணி ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டி யில் இந்தியா  - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 35-32 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது. மகளிர் அணி மிரட்டல் மகளிர் பிரிவு இறுதிப்போட்டியி லும் இந்தியா - ஈரான் அணிகள் பலப் பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளை யாடிய இந்திய மகளிர் அணி 75-21  என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை புரட்டியெடுத்து  அபார வெற்றியுடன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.

கண்ணகி நகர் கார்த்திகா கலக்கல்

இந்திய மகளிர் அணியில் தமிழ்நாட்டின் சென்னை அருகே கண்ணகி நகரை சேர்ந்த இளம் வீராங்கனை கார்த்திகாவும் இடம்பெற்றிருந்தார். அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய  பங்கு வகித்துள்ளார். இந்திய அணி தங்கம் வென்றதை தொடர்ந்து கண்ணகி  நகர் கார்த்திகாவுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

55 வயது ; தடை தாண்டுதல்  கன்னியாஸ்திரி உடையில்  தங்கப்பதக்கம் இது கேரளா ஸ்டைல்!

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த 55 வயது கன்னியாஸ்திரி சபீனா. இவர் அம்மாநில முதுநிலை தடகளப் போட்டியில் தடை தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதுவும் கன்னியாஸ்திரி உடையிலேயே கலந்துகொண்டு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது சிறுவயதில் இருந்தே தடை தாண்டும் (Hurdles)  விளையாட்டில் தேசிய அளவில் சிறந்து விளங்கிய இவர், தற்போது பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கன்னியாஸ்திரி உடையிலேயே தடை தாண்டி தங்கப்பதக்கம் வென்று அசத்திய சபீனாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.