நூறு ஆண்டுகளாக மயானப் பாதை இல்லாமல் அவதிப்படும் அருந்ததியர் குடும்பங்கள் சின்னகண்ணனூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு
சிவகங்கை, செப்.19- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சின்னகண்ணனூர் கிராமத்தில் வசிக்கும் 25 அருந்ததியர் குடும்பங்கள், கடந்த 100 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு கொண்டு செல்லும் பாதை வசதி இன்றி பெரும் துயரத்தில் உள்ளன. இங்கு உள்ள அருந்த தியர் குடியிருப்பிலிருந்து சுடுகாடு 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் அந்த இடத்துக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால், இறந்த வர்களின் உடலை சேறும் சகதியுமான வயல்கள் வழியாக தூக்கிச் செல்லும் அவல நிலை தொடர்கிறது. சமீபத்தில் 40 வயதான வேலு என்பவரின் உடலும் இதேபோல வயல்களுக்குள் தூக்கிச் செல்லப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் முத்துராமலிங்க பூபதி, மாவட்டச் செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் வீரய்யா உள்ளிட்டோர் கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவ சாயிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். கள ஆய்வு மேற் கொண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்கள் கூறுகையில், “சின்ன கண்ணனூரில் வசிக்கும் அருந்ததிய மக்கள் மிக மோசமான நிலையில் வசித்து வருகின்றனர். மயா னத்துக்கு சாலை வசதி உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அரசு புறம்போக்கில் புதிய மயானம் அமைத்து தர வேண்டும். குடிநீர் வசதி, வளர்ச்சி திட்டங்களில் ஒதுக்கீடு போன்ற அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நூறு ஆண்டு களாக நீடிக்கும் இந்த அவ லம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.