tamilnadu

img

கலைஞர் நினைவு தினம்: நீர், மோர் வழங்கல்

கலைஞர் நினைவு தினம்:  நீர், மோர் வழங்கல்

பாபநாசம், ஆக. 10-  கலைஞர் நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு திமுக சிறு பான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில், பொதுமக்களின் நலன் கருதி பாபநாசம் மெயின் சாலையில், தஞ்சாவூர் பேருந்து நிழற்குடை அருகே பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வந்தது.  பொது மக்களுக்கு நீர் மோர், சர்பத், பாதாம் கீர், பிரியாணி, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதில் மாவட்ட சிறு பான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் பாவை அனிபா, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் செல்வமுத்துக் குமரன், மீனவர் அணி அமைப்பாளர் புகழேந்தி, மாவட்டப் பிரதிநிதி பிரபு, முன்னாள் ஊராட்சித் தலைவர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.