tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நாகையில் கலைப் பிரச்சாரம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நாகையில் கலைப் பிரச்சாரம்

நாகப்பட்டினம், அக். 24-  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. இதை ஒட்டி, ஞாயிறன்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலும், திருமருகல் பேருந்து நிலையத்திலும் சென்னை கலைக்குழு சார்பில் “பட்டாங்கில் உள்ளபடி’’  என்ற கலை பிரச்சார நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளுக்கு, மாவட்டத் தலைவர் அ.தி. அன்பழகன் தலைமைதாங்கினார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி துவக்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா, மாவட்டத் தலைவர் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் ஜெ. ஜம்ருத்நிஷா, மீனாட்சி, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி ஆர்.கார்த்திகா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட நிர்வாகிகள் என்.அமுதா, சுந்தரம், ப.ஜீவானந்தம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் எம்.பி.குணசேகரன், என்.பாபுராஜ், எம்.தமிழ்வாணன் இந்திய தொழிற்சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர். ராஜேந்திரன், சிபிஎம் நகரச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும், இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர்.  பிரபல நாடக இயக்குநர் பிரளயன் நாடகத்தை இயக்கியிருந்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ராஜா நன்றியுரையாற்றினார்.