அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் ஆடிப் பெருந்திருவிழா வர்த்தக சங்க மண்டகப்படி
அறந்தாங்கி, ஜூலை 28- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த 22 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஞாயிறு அன்று அறந்தாங்கி வர்த்தக சங்கம் சார்பாக 6 ஆம் நாள் மண்டகப்படி நடைபெற்றது. இதில், காலை வீரமாகாளிக்கு அபிஷேகம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9 மணி முதல் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டது. மாலை சாமி ஊர்வலம் வாண வேடிக்கை மேளதாளத்துடன் நடைபெற்றது. மேலும் சொற்பொழிவு, பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, ரத காவடி ஊர்வலம், நாட்டு புற பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம், திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. வர்த்தக சங்க தலைவர் ரெ. தங்கதுரை, செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் ஹாரீஸ் முகம்மது உள்பட நூற்றுகணக்கான வர்த்தக சங்கத்தினர் முண்னிலையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறந்தாங்கி அரசு கலை கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணாக்கர்கள் அண்னதான சேவை பணி செய்தனர்.