பரம்பரை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சி
சென்னை, அக்.8- புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையாக திகழும் அப்போலோ புற்றுநோய் மையம் பரம்பரை புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக விழிப்புணர்வு வாரத்தை அனுசரிக்கிறது. மரபணுக்கள் காரணமாக ஏற்படும் பரம்பரை புற்றுநோய்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு சிகிச்சைப் பெறுவதன் முக்கியத்துவத்தை இதில் வலியுறுத்துகிறது. மரபணு சோதனை மற்றும் தன்முனைப்புடன் மேற்கொள்ளப் படும் அடிப்படை பரிசோதனைகள் வழியாக ஆரம்ப நிலையிலேயே இத்தகைய புற்று நோயை கண்டறிவதை வலியுறுத்துவது மீது இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்து கிறது. பரம்பரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் சாத்தியமுள்ள குடும்பங்களுக்கு இது குறித்த அறிவை வழங்குவதும், அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்கான திறனை வழங்கு வதும் இந்த விழிப்புணர்வு திட்டத்தின் நோக்க மாகும். உரிய நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவது உயிரைப் பாதுகாக்கும் என்பதை வலியுறுத்துவது இந்த பரப்புரை திட்டத்தின் ஒரு அங்கமாகும் என்று மருத்துவமனையின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் வெங்கட் கூறினார். பரம்பரை புற்றுநோய்கள், பெற்றோர்களி டமிருந்து அவர்களின் பிள்ளைகளுக்கு கடத்தப்படுகிற பரம்பரையான மரபணு பிறழ்வுகளினால் உருவாகின்றன. இந்த மரபணு பிறழ்வுகள், புற்றுநோய் ஏற்படு வதற்கான இடர்வாய்ப்பை அதிகரிக் கின்றன என்ற போதிலும், அவற்றை உறுதி செய்வதில்லை. இத்தகைய மரபணு பிறழ்வுகள், நம் உடலில் செல் வளர்ச்சி, பழுதுநீக்கல் மற்றும் புற்றுக்கட்டியை ஒடுக்குவதற்கு பொறுப்பான மரபணுக்களை சீர்குலைக்கின்றன. உலக அளவில் பரம்பரை புற்றுநோய்கள், ஒட்டுமொத்த புற்றுநோய்களில் ஏறக்குறைய 5–10% பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
