பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் ஏடிஜிபி தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
பூடானில் இருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இந்த வழக்கில் சிக்கிய துல்கர் சல்மான்,”தனது காரை விடுவிக்க சுங்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் துல்கர் சல்மானின் கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடக அரசின் சமூக நீதி ஆணையம் தலைமையில் நடைபெற்று வரும் சமூக, பொருளாதார, கல்வி சார்ந்த சாதிவாரி கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதால், மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் அக்டோபர் 18 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ளார்.