tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் யெச்சூரிக்கு ஒரு மாதம் நினைவஞ்சலி

மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் யெச்சூரிக்கு ஒரு மாதம் நினைவஞ்சலி

செப்டம்பர் 12 - தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினம் ஆகும். இந்நிலையில், தோழர் சீத்தாராம் யெச்சூரியின் பணிகளை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 12 துவங்கி செப்டம்பர் 12 வரை ஒரு மாதத்திற்கு நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முடிவு செய்துள்ளது. இதன் துவக்கமாக, புதுதில்லி ஏ.கே. கோபாலன் பவனில் உள்ள மத்தியக் குழு அலுவலகத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட தோழர் சீத்தாராம் யெச்சூரியின் படத்திற்கு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மத்தியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மத்தியக் குழு அலுவலகம் மற்றும் வெகுஜன அமைப்புகளில் பணிபுரியும் தலைவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.