tamilnadu

img

99.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

99.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

தஞ்சாவூர், செப். 11-  கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர் என மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநர் எஸ்.பத்மாவதி தெரிவித்தார்.  தஞ்சாவூரில், ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்ச கத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் அவர் மேலும் பேசியதாவது: “சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன. இதேபோல், தமிழ்நாட்டிலும் ராமேஸ்வரம், தஞ்சாவூர் பெரிய கோவில், நவக்கிரக கோவில்கள் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் பெரியகோவிலில் ரூ. 25 கோடி மதிப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வச திகள், பொருள் விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற் காக ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்கு வந்தனர். இவர்களில் 11.61 லட்சம் பேர் தமிழ்நாட்டில் சுற்றிப் பார்த்தனர். இதேபோல், தமிழ்நாட்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 3.06 கோடி பேர் வந்து சென்றனர். சில ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது” என்றார். இதையடுத்து, நபார்டு உதவிப் பொதுமேலாளர் விஸ்வந்த் கண்ணா, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் பிரிவு தென் மண்டல இயக்குநர் (பொ) வி.பழனிசாமி சிறப்புரையாற்றினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி, முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் ஆகியோர் பேசினர். முன்னதாக, சென்னை பத்திரிகை  தகவல் பிரிவு இயக்குநர் வி.பழனி சாமி வரவேற்றார். துணை இயக்குநர் ஜெ. விஜயலட்சுமி நன்றி கூறினார்.