tamilnadu

img

79ஆவது பொன்மலை தியாகிகள் தினம் நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி செவ்வணக்கம்

79ஆவது பொன்மலை தியாகிகள் தினம் நினைவு ஸ்தூபிக்கு மலர்தூவி செவ்வணக்கம்

திருச்சிராப்பள்ளி, செப். 5-  8 மணிநேர வேலை, தண்டனை வழங்கும்  முன் முறையான விசாரணை, ஊதிய விகித மாற்றம் மற்றும் பறிக்கப்பட்ட உரிமைகளுக் காக வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழி லாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 1946 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த  போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் இந்தியா வின் ஹாரிசன் தலைமையிலான மலபார் காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் தோழர்கள் தங்கவேலு, தியாகராஜன், ராஜு,  ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேர்  நெஞ்சில் குண்டு பாய்ந்து பொன்மலை சங்கத் திடலில் உயிர் நீத்தனர். 5 தோழர்களின் நினைவாக 79ஆம் ஆண்டு பொன்மலை தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை அன்று  பொன்மலை சங்கத்திடலில் கடைப்பிடிக்கப் பட்டது. இதனையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் தலைமையில், மாநகர்  மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செ ல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, கார்த்திகேயன், மணிமாறன், ரெங்கராஜன், பொன்மலை பகுதிச் செயலாளர் விஜயேந்திரன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.  அதே போல மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசீலன் தலைமையில், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ரஜினிகாந்த், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தெய்வநீதி குருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.