tamilnadu

மதுரையில் தீக்கதிருக்கு 790 சந்தாக்கள் பெ. சண்முகத்திடம் ரூ. 14 லட்சம் அளிப்பு

மதுரையில் தீக்கதிருக்கு 790 சந்தாக்கள் பெ. சண்முகத்திடம் ரூ. 14 லட்சம் அளிப்பு

மதுரை, ஆக. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.  இதில், மதுரை மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஆண்டுச் சந்தா - 146, 6 மாதம் சந்தா -198, 3 மாதச் சந்தா - 17, மாதச் சந்தா - 100 என மொத்தம் 461 சந்தாக்களுக்கான தொகையாக ரூ. 5 லட்சத்து 95 ஆயிரத்து 590 வழங்கப்பட்டது. மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் ஆண்டுச் சந்தா 142, ஆறு மாத சந்தா 187 என மொத்தம் 329 சந்தாக்களுக்கான தொகையாக ரூபாய் 8 லட்சத்து 100 வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக தீக்கதிர் சந்தா தொகையாக வழங்கப்பட்ட ரூ. 13 லட்சத்து 96 ஆயிரத்து 590-ஐ மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பெற்றுக் கொண்டார். கியூபா ஆதரவு நிதியாகவும் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் ரூபாய் 62 ஆயிரத்து 710, புறந கர் மாவட்டக்குழு சார்பில் ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர்  இராமலிங்கம், கே. சாமுவேல் ராஜ்,  மாவட்டச் செயலாளர்கள் மா. கணேசன், கே. ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.  பொன்னுத் தாய், எஸ். பாலா, தீக்கதிர் மதுரை பதிப்பு மேலாளர் ஜோ. ராஜ்மோகன், தீக்கதிர் பொறுப்பாளர்கள் பா. ரவி, வை. ஸ்டாலின், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.