tamilnadu

474 அரசியல்  கட்சிகளின்  பதிவு ரத்து தமிழ்நாட்டில் 42

474 அரசியல்  கட்சிகளின்  பதிவு ரத்து தமிழ்நாட்டில் 42

புதுதில்லி, செப். 19- நாட்டில் அரசியல் கட்சி கள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட வேண்டும். “லெட்டர் பேட்” கட்சி களாக மட்டும் இருக்கக் கூடாது.  புதிதாக தொடங்கப் பட்ட மற்றும் களச் செயல்பாட்டில் உள்ள கட்சி கள் 5 முதல் 6 ஆண்டு களில் தேர்தலில் போட்டியிட வில்லை என்றால், அக்கட்சி களின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி கடந்த 2019  முதல் தொடர்ந்து 6 ஆண்டு களுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலிலாவது போட்டி யிட்டு இருக்க வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை நிறை வேற்றத் தவறிய, 334 அர சியல் கட்சிகளை முதற்கட்ட மாக, ஆகஸ்ட் 9 முதல் பட்டி யலில் இருந்து, தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.  தற்போது 6 ஆண்டு கள் தேர்தலில் போட்டி யிடாத- மேலும் 474 அர சியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் நீக்கி யுள்ளது. இதில், தமிழ் நாட்டில் உள்ள 42 கட்சி களின் பதிவும் ரத்து செய்ய ப்பட்டுள்ளது.  இதன்மூலம் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 359 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டி யிட்டதற்கான வரவு - செலவு கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.