தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
சென்னை, ஜூலை 14 - தமிழ்நாடு அரசுத் துறைகளில் முக்கியத் தகவல்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஊடகங்கள் மூல மாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்ப தற்கு செய்தித் தொடர்பாளர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஜெ.ராதா கிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், பெ. அமுதா ஆகிய நான்கு பேர் செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜெ. ராதாகிருஷ்ணன் எரிசக்தி, மருத்துவம், போக்குவரத்து, கூட்டு றவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளி மற்றும் உயர் கல்வி, கைத்தறி, மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளுக்கு பொறுப்பாக உள்ளார். ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சி, நக ராட்சி நிர்வாகம், கால்நடை பரா மரிப்பு, வேளாண்மை, நீர் வளம், சுற்றுச்சூழல், குறு-சிறு தொழில்கள், இயற்கை வளங்கள் ஆகிய துறை களை கவனிப்பார். தீரஜ் குமார் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை களுக்கும், பெ.அமுதா சமூக நலன், மகளிர் உரிமை, மாற்றுத்திற னாளிகள் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படு த்தப்பட்டோர் நலன், வீட்டுவசதி, சுற்றுலா ஆகிய துறை களுக்கு பொறுப்பாக உள்ளனர்.