tamilnadu

அரசுக் கல்லூரிகளில் 20 சதவீதம்  கூடுதல் மாணவர்கள் சேர்க்கை

அரசுக் கல்லூரிகளில் 20 சதவீதம்  கூடுதல் மாணவர்கள் சேர்க்கை

சென்னை: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் மாணாக்கர்கள் அதிகளவில் விண்ணப்பித்து சேர்க்கைக்காக காத்திருப்பதை அறிந்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி  2025-26 ஆம் கல்வியாண்டிற்கான 20 சதவீத கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து  வருகிறது. இந்தியாவில் மாணாக்கர் சேர்க்கை விகிதத்தில்  தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி  வருகிறது. இவ்வாண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணாக்கர் கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்த  முதலமைச்சர், இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணை யிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாணாக் கர்கள் காத்திருப்பதை அறிந்து, அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கு 15 சதவீத இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் கூடுதலாக மாணவர்  சேர்க்கை இடங்களை உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள்  அறிவிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஏழை, எளிய  மாணாக்கர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டு மென உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.