tamilnadu

img

ஆந்திராவில் கோர விபத்து சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் பலி

ஆந்திராவில் கோர விபத்து சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் பலி

கர்னூல் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்க ளூருவை நோக்கி தனியார் ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டி ருந்தது. படுக்கை வசதி கொண்ட இந்த பேருந்தில் 40 பயணிகள் உட்பட 43 பேர்  இருந்தனர்.  கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே அதிகாலை 3.30 மணியளவில் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து அதிவேகத்தில் மோதி யது.  இருசக்கர வாகனம் மற்றும் அதில் பயணித்தவர்கள் தொடர்பாக எவ்வி தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த மோதலில் பேருந்து தீப்பிடித்தது. தீ மளமளவென பேருந்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணி கள் அனைவரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். தூக்கம் தெளிந்த சில பயணிகள் அலறியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பினர். தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணி யில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ விபத்தில்  சிக்கி 20 பேர் உடல் கருகி உயிரிழந்த னர். 8க்கும் மேற்பட்டோர் படுகாயங்க ளுடன் மீட்கப்பட்டுள்ளனர். 12 பேர் காயங்களின்றி உயிர் தப்பினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரங்கல் இந்நிலையில், ஆந்திராவில் பேருந்து தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதி பதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன்   உள்ளிட்டோர் இரங்கல் தெரி வித்துள்ளனர்.  மேலும்,“தீ விபத்தில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் (பிரதமர் நிவாரண நிதியில்) வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.