மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவாரூர் மின் திட்ட 14 ஆவது மாநாடு
திருவாரூர், ஜூலை 23- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவாரூர் மின் திட்ட 14 ஆவது மாநாடு, மன்னார்குடியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு, திட்டத் தலைவர் எஸ். சகாயராஜ் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் துவக்க உரை யாற்றினார். திட்டச் செயலாளர் கே.ரா ஜேந்திரன் வேலை அறிக்கை வாசித்தார். திட்டப் பொருளாளர் ஜி.ஆர். முகேஷ் வரவு- செலவு அறிக்கையை முன் வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் காங்கே யன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். திட்டத் தலைவராக எஸ்.சகாயராஜ், திட்டச் செயலாளராக கே.ராஜேந்திரன், திட்டப் பொருளாளராக ஜி.ஆர். முகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே துவங்கிட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.