tamilnadu

img

ஆம்பூர் கலவர வழக்கில் 118 பேர் விடுதலை

ஆம்பூர் கலவர வழக்கில் 118 பேர் விடுதலை

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

திருப்பத்தூர், ஆக. 28 - 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்பூர் கலவர வழக்கில் முதல்  நான்கு வழக்குகளில் இருந்து 118 பேரை விடுதலை செய்து திருப்பத் தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் காணாமல் போன வழக்கு தொடர்பாக, ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமத் (26) என்ப வரை, பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மார்டின் பிரேம்ராஜ் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். விசார ணையின்போது ஷமீல் கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், 2015 ஜூன் 27 அன்று ஆம்பூர் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஷமீல் அஹ மதைத் தாக்கிய காவல் ஆய்வா ளர் உள்பட 6 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து கைது  செய்ய வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டனர். சென்னை - பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையில் மறி யலிலும் ஈடுபட்டனர். அப்போது, காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்துகள், லாரிகளுக்குத் தீ  வைக்கப்பட்டது. தேசிய நெடுஞ் சாலையோரம் இருந்த கட்டட ங்கள் சேதப்படுத்தப்பட்டன. 54 காவ லர்கள் பலத்த காயமடைந்தனர். வழக்கு விசாரணை இதுதொடர்பாக 191 பேர் மீது காவல் துறையினர் 12 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து வேலூர், கடலூர், சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்தது. வழக்கில் கைதான 118  பேருக்கு சென்னை உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி யது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வியாழனன்று (ஆக. 28) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஆம்பூர் கலவர வழக்கில் 191 பேர் மீது மொத்தம் 12 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெற்று வந்த நிலையில், 4 வழக்கு களில் 118 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.