tamilnadu

img

“ஓரணியில் தமிழ்நாடு“ முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்கள் இணைப்பு

“ஓரணியில் தமிழ்நாடு“ முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்கள் இணைப்பு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் விருதுநகர், செப்.14- தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ஓர ணியில் தமிழ்நாடு என்ற  முன்னெடுப்பில் 1 கோடி குடும்பங்க ளுக்கு மேல் இணைந் துள்ளனர் என தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் கூறினார். விருதுநகரில் செய்தியாளர்களை சந் தித்த அவர் கூறியதாவது:   தமிழகத்தில் உள்ள 68 ஆயிரம் வாக்குச்  சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடி முகவர்களும், தங்களது பகுதியில்  உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மக்களை ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் இணைத்துள்ளனர்.   ஒன்றிய அரசு நமது மொழி, இனத்தை அழிக்கும் நடவடிக்கையை எடுத்து வரு கிறது. இதை எதிர்த்து மக்களை ஒன்றி ணைக்கும் எண்ணத்தோடு ஓரணியில் தமிழ்நாடு என்று மக்களை இணைத்து வரு கிறார் தமிழக முதல்வர். செப்.15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி யை  மண், மொழி, இனம் காக்க பொதுமக்க ளுடன் இணைந்து நடத்த உள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 4.19 லட்சம் பேர்  இணைந்துள்ளனர், இன்னும் இணைந்து  கொண்டுள்ளனர். நாங்கள் செல்லும்  இடத்தில் தமிழக அரசையும் திட்டங்களை யும் மக்கள் விமர்சிக்கவில்லை.   செப்.20ம் தேதி மாவட்ட தலைநக ரங்களில் பொதுக்கூட்டமும், கரூரில் 30ம் தேதி முப்பெரும் விழாவும் நடைபெற உள்ளது. உங்களோடு ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் அதிகமாக மகளிர் உரிமைத்  தொகை குறித்த மனுக்கள் வருகின்றன. முதல்வரைப் பொறுத்தவரை தகுதி யுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்கும் போது கடந்த அதிமுக அரசின் மோசமான நிர்வா கத்தால் அதிகப்படியான கடன் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே,  பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவர முடியவில்லை. அதற்காக ஒரு குழுவினை அமைத்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வரு கிறோம் என தெரிவித்தார்.