1.78 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத வேண்டிய நிலை அமைச்சர் தகவல்
சென்னை, செப். 5– தமிழ்நாட்டில் 1.78 லட்சம் அரசு மற்றும் அரசு சாரா ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத வேண்டிய நிலை வரலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பல்வேறு ஆசிரி யர் சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்கும் கூட்டம் நடை பெற்றது. “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர் பெருமக்களின் வாழ்க்கையில் கலக்கத்தையும், வாழ்வாதாரத்திற்கான கேள்வியையும் எழுப்பியுள்ளது. சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் வகையில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். இது ஒட்டுமொத்த இந்திய ஆசிரியர்களுக்குமான பிரச்சனை. எந்த பாதிப்பும் வராமல் ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் பாதுகாப்போம். மாநிலங் களவை உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் வில்சனை நாட வுள்ளோம்” என்று அமைச்சர் கூறினார்.