நெல்லை ரயில் நிலையம் முன்பு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு வெங்கடேஷ் ஆனந்த்(19) என்ற இளைஞரை அடையாளம் தெரியாத கும்பல் திடீரென வழிமறித்து ஓடஓட அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து. விசாரணை மேற்கொண்டுள்ளனர்
முதல்கட்ட விசாரணையில் 2023 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பகுதியில் சக்தி என்ற நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான வழக்கு வெங்கடேஷ் மீது இருப்பது தெரியவந்துள்ளது. பழிவாங்கல் நடவடிக்கையா என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களைத் தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.