tamilnadu

img

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி

தமிழகம் புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான  இடைத் தேர்தல்களிலும் மகத்தான வெற்றி பெறும், அதன் மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


நான் 1971-ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்றஅனைத்து தேர்தல்களிலும் செயலாற்றி இருக்கிறேன். இந்த தேர்தலில் பல தொகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபட்டேன். பொதுவாக தேர்தல்என்றால் மக்கள் மத்தியில் இருக்கும் பரபரப்பு இந்ததேர்தலிலும் இருப்பதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம்பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்களில் நமது கருத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இந்த தேர்தலில் அவற்றைத் தாண்டி தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவிற்கு பிரச்சாரம் நடைபெற்று உள்ளது. நாட்டின் பொருளாதார பிரச்சனைகளைமக்கள் புரிந்து வைத்துள்ளனர். சாதாரண மக்கள் கூடஅனைத்து விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அனைத்து அரசியல் விவாதங்களையும் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களையும் பார்த்து மக்கள் விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.


மோடி-எடப்பாடிக்கு  எதிராக வீசும் அலை


குறிப்பாக மோடி – எடப்பாடி தலைமையிலானகூட்டணி குறித்து அதிகளவு விமர்சிக்கப்படுகிறது. மோடி அரசின் ஐந்தாண்டு காலம் தமிழக மக்களுக்கு இழைத்த துரோகத்தையும், அதை தட்டிக் கேட்க தைரியமில்லாத எடப்பாடி எடுபிடி அரசையும் கடுமையாக மக்கள் கண்டனம் செய்கிறார்கள். அதேபோன்று நேற்று வரையும் மோடி அரசையும்,எடப்பாடி அரசையும் கடுமையாக விமர்சித்து விட்டுதற்போது தலைகீழாக மாறி அவர்களுக்கு துதிபாடும்டாக்டர் ராமதாசை காமெடியாக பார்க்கிறார்கள்.தமிழக மக்களின் ஏகோபித்த எதிர்ப்பை புறம் தள்ளி நீட் தேர்வு உறுதியாக நடத்துவோம், கூடுதலாக5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை செயல்படுத்தி ஏழை மாணவர்களது கல்வியில் மண்ணைப்போட உள்ளார்கள். எட்டுவழிச்சாலை கட்டாயம் நிறைவேற்றப்படும் என பாஜகவினர் அறிவித்துள்ளார்கள். நூறுநாள் வேலையைப் பற்றி பாஜக அறிக்கையில் எதுவும் இல்லை. மேகதாது அணைக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து என்ற பேச்சையே காணோம். விமானப்படைக்கு 126விமானம் வாங்குவதற்காக காங்கிரஸ் அரசு போட்டஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 36 விமானங்களை மட்டும் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு விட்டு காவல்காரன் என மோடி பேசுவதை மக்கள் ரசிக்கவில்லை.ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகளை துவைத்துபோட்டுள்ளார்கள். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு-குறு தொழில்கள், விசைத்தறிகள் நொறுங்கிக் கிடக்கின்றன. போட்ட மூலதனம் இழந்து கடன் கட்ட முடியாமல் முதலீட்டாளர்கள் கதிகலங்கி நிற்கின்றனர். பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வேலை வருமானம் இழந்து தவித்து வருகின்றன.கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகள் வாங்கியகடனை தள்ளுபடி செய்ய மறுத்து வருகிறது.மறுபக்கம் எடப்பாடி அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல்-முறைகேடுகள் மக்களை மிகுதியான கோபமடைய செய்துள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் கொதிப்படைந்துள்ளார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மக்கள் உள்ளங்களில் எரிகனலாக தகித்துக் கொண்டுள்ளது.


தமிழகத்தில் ஆட்சி மாற்றம்


அதே மாதிரி அதிமுக அணியில் உள்ள கட்சிகளின் சந்தர்ப்பவாத நிலை குறித்தும் பேசுகிறார்கள். போன மாதம் வரை எடப்பாடி அரசு பற்றி ராமதாஸ்என்ன பேசினார். இன்றைக்கு கூட்டணியில் போய் சேர்ந்தது எல்லாம் கிண்டலும், கேலியுமாக வெளிப்படையாக மக்கள் பேசத்துவங்கியுள்ளார்கள். குறிப்பாக சொல்லப் போனால் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான ஆதரவுஅலையாகவும், மோடி, எடப்பாடி அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பலையும் வீசுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. மேலும் தேர்தலுக்கு பிறகு தமிழகத்திலும் ஒரு அரசியல் மாற்றம் வரும் என்றுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது அதிமுககூட்டணியில் இருப்பவர்கள் கடைசி வரை சேர்ந்திருப்பார்களா? ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணிகளுக்குள்ளே பிரச்சனைகள் மீண்டும் வரக்கூடும் என மக்கள் கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.


வெறுத்துப் போயிருக்கும்  அதிமுக தொண்டர்கள்


அதிமுக கட்சி பெரிய இயக்கமாக பெரிய கட்சியாக இருந்தது என்பது உண்மை தான். இந்த 2 ஆண்டுகளில் அதிமுகவுக்குள் நடைபெறும் பதவி சண்டையில் அதிமுக தொண்டர்கள் வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை எல்லாரும் வாய்மூடிஇருந்தனர். அவர் இறந்த பிறகு ஒருத்தரை ஒருத்தர் கவிழ்த்து விடுவதற்கு அடித்துக்கொள்வதை மக்கள்பார்க்கிறார்கள். இதனால் தொண்டர்களும் வெறுத்துப்போயுள்ளனர். ஓ.பி.எஸ், இபிஎஸ். அணியாக பிரிந்துஉள்ளனர். யார் மீதும் தொண்டர்களுக்கு ஆதரவு நிலைஇல்லை. ஒருவெறுப்பு உணர்வு தான் இருக்கிறது.ஜெயலலிதா இறந்தவுடன் ஓ.பி.எஸ் முதலமைச்சராகஆகிவிட்டார்.


அப்போது இ.பி.எஸ் 6வது இடத்தில் இருந்தார். இரண்டொரு மாதத்தில் இ.பி.எஸ் முதலமைச்சராக ஆகிவிட்டு ஒ.பி.எஸ்ஸை வெளியேற்றிவிட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகு இரண்டு பேருக்கும் நடைபெற்ற சண்டை சச்சரவு, டி.டி.வி. பிரிந்துபோனது, ஓ.பி.எஸ். பிரிந்து போனது, ஓ.பி.எஸ்.அரசைஎதிர்த்து ஓட்டு போட்டது, அந்த வழக்கு இன்னும்உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதெல்லாம் மீண்டும் பூகம்பமாக வெடிக்கும் என்ற நிலைஉள்ளது. அதிமுக தொண்டர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்.இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் பதவியை பயன்படுத்தி கொள்ளையடிப்பது ஒன்றே குறியாக உள்ளார்கள். அதற்காக எதையும் செய்யும் நிலையில்உள்ளார்கள். இந்த ஆட்சி நீடிப்பதால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்ற தெளிவான முடிவில் மக்கள் உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த ஆட்சியையும் நீக்குவதற்கான வாய்ப்பாகவே 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தேர்தலில் கூட ஓ.பி.எஸ்.அணி இ.பி.எஸ்அணி என்ற பிளவோடு தான் தேர்தல் பணி நடப்பதாககூறுகிறார்கள். அதனால் இந்த தேர்தலுக்கு பிறகு முரண்பாடு முற்றி இந்த ஆட்சியும், கட்சியும் முடிவுக்கு வந்து விடும் என்ற நிலை உள்ளது.


மோடியின் கைப்பாவையான தேர்தல் கமிசன் 


தேர்தல் கமிசன் ஒருதலைபட்சமாகத்தான் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பிரவீன்குமார் இருந்தார். அவருக்கு முன்பு நரேஷ்குப்தா இருந்தார். அவர்கள் எல்லாம் ஓரளவிற்கு சாய்மானம் இல்லாமல் நடந்து கொண்டார்கள். இன்றைக்கு ஆளுங்கட்சியினர் தேர்தல் கமிசனையே செயல்படவிடாமல் நிர்ப்பந்தம் செய்கிறார்கள். ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு தேர்தல் கமிசன் பணிந்து போகிறார்கள். எதிர்கட்சியினர் வீடுகளில் சோதனை செய்வது. எதிர்கட்சியினர் பணத்தை பறிமுதல் செய்வது.மோடியின் கைப்பாவையானது தேர்தல் கமிசன். அகில இந்திய அளவிலான தேர்தல் கமிசனே அப்படித்தான் இருக்கிறது.வாக்கு இயந்திரம் தொடர்பாக எழுப்பும் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் தெளிவான பதில் தர மறுக்கிறது. வாக்களித்தவுடன் யாருக்கு வாக்களித்தோம் என்ற ரசீது பெறும் வாய்ப்பு இம்முறை உள்ளது. வாக்கு எண்ணும்போது இந்தரசீதுகளையும், இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குஎண்ணிக்கையையும் குறைந்தபட்சம் 50 சதமான வாக்குச்சவாடிகளில் ஒத்துபார்க்கும் வசதி வேண்டும்என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.


நாடு முழுவதும் திட்டமிட்டே எதிர்கட்சிகளின் தலைவர்களது வீடுகளில் பறக்கும்படை வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. திரிபுராமாநிலத்தில் முதல்கட்ட வாக்குப் பதிவின் போதுபகிரங்கமாக வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ (எம்) அகில இந்தியபொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி புகார்அளித்து மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.தமிழ்நாட்டில் ‘வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவோம்’ என பகிரங்கமாக பேசிய அன்புமணி மீது சுண்டுவிரலைக் கூட தேர்தல் ஆணையம் நீட்டவில்லை.இத்தகைய அதிகார பலம், பண பலம், குண்டர்கள்பலம் அனைத்தையும் எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அமோகமாக வெற்றிபெறுவார்கள் என்பது உறுதி.


தொகுப்பு : இலமு




;