tamilnadu

img

மக்களிடம் பணத்தை கறக்கும் போலி இ-பாஸ் கும்பல்கள்....

சென்னை:
கொரோனா தொற்று ஆரம்பத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் தற்போது பிற மாவட்டங்களிலும் பாதிப்புஎண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலை யில் கொரோனா ஊரடங்கில் தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 4  மாதங்களுக்கு பின் மக்கள் தங்கள் பணியிடங்களை நோக்கி நகரத் துவங்கி உள்ளனர். 

இதில் இ-பாஸ் கட்டாயம் என்றஅறிவிப்பால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அந்தந்த மண்டலங் களுக்கு இடையே இயங்கிய அரசு பேருந்தும் நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் பணியிடங்ளுக்கு செல்லஇ-பாஸ் பெற முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர்.திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்கு மட்டுமே உரிய ஆவணங்களின் அடிப்படையில் இ-பாஸ்வழங்கப்படுகிறது. பிற விஷயங்களைகாரணம் காட்டி விண்ணப்பிப்பவர் களுக்கு இ-பாஸ் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இ-பாஸ் வாங்கி தர புரோக்கர் கூட்டம் உள்ளதாக கூறப்படு கிறது. ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரைபணம் வாங்கிக் கொண்டு இ-பாஸ் வாங்கிக் கொடுப்பதாகவும், மேலும் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுக்க மற்றொரு கும்பல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மத்திய அரசு தற்போது இ-பாஸ் கட்டாயம் இல்லை என்று  அறிவித்து விட்ட நிலையில், தமிழக அரசு இ-பாஸ் முறை இம்மாதம் 31-ஆம்தேதிவரை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, 50 சதவீத ஊழியர் களுடன் இயங்கி வந்த தொழில் நிறுவனங்கள், தற்போது 75 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால், சொந்த ஊர்களுக்கு சென்ற பலர், பணிபுரியும் இடத்திற்கு செல்ல இ-பாஸ் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால், இ-பாஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவ தால், அவர்களும் புரோக்கர்களை நம்ப வேண்டிய அவல நிலை உள்ளது.தற்போது, சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற ஊர்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் கார் மற்றும் வேன்களில் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில், இ-பாஸ் விண்ணப்பித்து அழைத்து வரும் சம்பவங்களும் தினமும் அரங்கேறி வருகின்றன. கடந்த ஜூலைமாதம் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இ-பாஸ் கேட்டு 5 லட்சம்விண்ணப்பங்கள் வந்ததாகவும், அதில் ஒன்றரை லட்சம் விண்ணப்பங்களுக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இ-பாஸ் பெறும் முறையைஎளிதாக்க வேண்டும், அல்லது இ-பாஸ் முறையை மத்திய அரசு கூறியதுபோல் ரத்து செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.