மோசமாக காயமடைந்து நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களைக் கருணை கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாக நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. அதனால் ரேபிஸ் போன்ற தொற்றுகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இந்நிலையில் காயமடைந்து, நோய்வாய்ப்பட்டுச் சிரமப்படும் தெருநாய்களை கருணைக்கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்யப்பட வேண்டும் எனவும், கருணை கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், அவற்றை முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.