tamilnadu

img

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காவிரி கரையோர டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் மதியம் 12.00 மணி முதல் 75000 கன அடி வரை உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில், இது படிப்படியாக 100000 கன அடி வரை அதிகரிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.