சென்னை
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
40 வயதை கடந்துவிட்டாலும் கவுரவமான வேடத்தில் கலக்கி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சகோதரி வினயா கிருஷ்ணன் உடன் வியாழனன்று இரவு கிழக்கு கடற்கரைச்சாலையில் இன்னோவா காரில் பயணித்தார். காரை செல்வகுமார் என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில் கடற்கரைச்சாலையில் உள்ள முட்டுக்காடு சோதனை சாவடியில் அவரது அனுமதியுடன் வாகனசோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனையில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள் கொரோனா கட்டுப்படுத்த பகுதி என்பதால் அங்கு டாஸ்மாக் திறக்கப்படவில்லை. இதனால் சென்னைவாசிகள் வெளிமாவட்டங்களில் இருக்கும் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி சென்னைக்கு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் ரம்யா கிருஷ்ணன் சிக்கியுள்ளார். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனது தெரிகிறது. காரை ஓட்டி வந்த செல்வகுமாரை கைது செய்து கானத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றனர்.