மாணவர் சங்கத்தினர் ரயில் மறியல் - கைது
கோவை, டிச. 16 – குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் திங்க ளன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர் சங்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்களை குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந் துள்ள குடியுரிமை திருத்த சட்டத் திற்கு கடும் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்து வருகின்றன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்காளம், தில்லி, மும்பை உள் ளிட்ட இடங்களில் பொதுமக்கள், மாண வர்களின் போராட்டங்கள் தீவிரம டைந்துள்ளன. இதன்ஒருபகுதியாக, தில்லியில் ஜாமியா அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இவர்கள் மீது காவல்து றையினர் நிகழ்த்திய கொடூர தாக்கு தலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும், ஏரா ளமான மாணவர்கள் கைது செய்யப் பட்டனர். இச்செயலுக்கு எதிரப்பு தெரி வித்தும், சட்ட திருத்தத்தை கண்டித்தும் நாட்டின் பல பகுதிகளிலும் மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதன்தொடர்ச்சியாக கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாண வர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் நிரு பன் சக்கரவர்த்தி, மாவட்ட தலைவர் அசார், செயலாளர் தினேஷ்ராஜா ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய மோடி அரசிற்கு எதிராக ஆவேச முழக்கங்களை எழுப் பினர். இதைத்தொடர்ந்து ரயில் மறி யலில் ஈடுபட முயன்றவர்களை காவல் துறையினர் நான்கு புறமும் சூழ்ந்து கைது செய்ய முயன்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதன்பின் மாண விகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட் டோரை காவல்துறையினர் அராஜ கமான முறையில் கைது செய்தனர்.