states

img

தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து - 12 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில், ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பசமைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதார அமைச்சர் தாமோதர ராஜ நரசிம்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்து நடந்தபோது 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையில் இருந்ததாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.