வெளிநாட்டு பயணத்தை துவக்கினார் மோடி
இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்குச் செல்வதற்காக பிரதமர் மோடி புதன்கிழமை புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். நான்கு நாள் பயணமாக அவர் இங்கி லாந்து மற்றும் மாலத்தீவுகளுக்கு செல்கி றார். முதலில் இங்கிலாந்துக்குச் செல்லும் அவர் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட பேச்சுவார்த்தை களை நடத்த உள்ளார். இங்கிலாந்து - இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளும் தடையற்ற வர்த்தகத்துக்கு ஒப்புக்கொண்டன. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின்போது இந்த ஒப் பந்தம் கையெழுத்தாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு மாலத்தீவு ஜனாதிபதி முய்சு அழைப்பின் பேரில் அந்நாட்டின் 60 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்க ளில் கலந்துகொள்ள அவர் மாலத் தீவுக்கு செல்கிறார்.