states

“வாழ்க்கையையே போராட்டமாக்கிய மக்களின் நாயகன் வி.எஸ்”

“வாழ்க்கையையே போராட்டமாக்கிய மக்களின் நாயகன் வி.எஸ்” 

திரை உலகம் இரங்கல்

திருவனந்தபுரம் கேரள முன்னாள் முதல மைச்சரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகத் தலைவர்களுள் ஒரு வருமான வி.எஸ். அச்சுதானந்த னின் மறைவுக்கு திரைக்கலைஞர் கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அன்புக்குரிய தோழர் வி.எஸ்.க்கு கண்ணீர் அஞ்சலிகள். தனது வாழ்க்கையையே போராட்ட மாக்கிய மக்களின் நாயகன் தோழர் வி.எஸ் சாதாரண மக்களின் நம் பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பிரகாசித்த அந்த மகத்தான ஆளு மையுடன் அன்பான உறவைப் பேண முடிந்தது அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன். அவர் மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவராகவும், ஒரு முறை முதலமைச்சராகவும் பணியாற்றினார். எப்போதும் தனது நிலைப்பாடுகளிலும் இலட்சியங்க ளிலும் உறுதியாக நின்றார். மலை யாளிகளின் மனதில் அவர் ஒரு போதும் இறக்க மாட்டார் என்று மோகன்லால் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மம்முட்டி, தனது அன்புத்  தோழர் வி.எஸ். அச்சுதானந்தனு க்கு அஞ்சலி எனவும், திரைக் கலைஞரும் அமைச்சருமான சுரேஷ் கோபி, மலையாளிகளின் சொந்த போராட்டத் தலைவர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனு க்கு அஞ்சலி செலுத்துவதாக தங்களது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டிருந்தனர்.  மஞ்சு வாரியார் வி.எஸ். அச்சுதானந்தனின் காலில் ஒரு வடு இன்னும் அழியா மல் இருப்பதாக ஒரு முறை படித்தது நினைவுக்கு வருகிறது. புன்னப்புரா-வயலார் போராட்டத் தின் நினைவாக இருக்கும் அந்த  துப்பாக்கி முனையால் ஏற்பட்ட வடு அது. அந்தக் காலால் அவர் மக்க ளின் இதயங்களில் நுழைந்தார். ஒவ்வொரு அடியிலும் அதைக் கடைப்பிடித்ததால் அவர் எப்போ தும் ஒரு போராளியாக உள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான வி.எஸ். இன் நிலைப்பாடும் காலத் தின் தேவையாக இருந்தது. தனது பெயரை ஒரு உண்மையின் முத்தி ரையாக மாற்றிய தலைவருக்கு எனது அஞ்சலி, என மஞ்சு வாரி யார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், பிரித்வி ராஜ், இந்திரஜித், அஜு வர்கீஸ், நிவின் பாலி, டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி, நிகிலா விமல், ஆஷிக் அபு, ரீமா கல்லிங் கல், ஷாஜி கைலாஷ் உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் தோழர் அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.