காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா
நாடாளுமன்றம் இயங்குவதை பற்றியோ, பஹல்காம் விவாதம் பற்றியோ, பீகாரில் வாக்கு கள் திருடப்படுவது பற்றியோ, துணை ஜனாதிபதி ராஜினாமா செய்தது பற்றியோ, எந்தக் கவலை யுமின்றி மோடி ஒரு விஷயத்தை மட்டும் தவறாமல் செய்துவிடுவார். வெளிநாட்டுக்கு பறந்து விடுவார். இப்போதும் சென்றுவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவிலும் தேர்தலை இப்படித்தான் அவர்கள் கைப்பற்றினார்கள். ஒரு கோடி வாக்காளர்கள் அங்கு புதிதாக சேர்க்கப்பட்டனர். தேர்தல்களை தங்களுக்கு ஏதுவாக மாற்றுவதுதான் பாஜகவின் வழக்கமாக இருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி. கிரிதாரி யாதவ்
தேர்தல் ஆணையத்துக்கு நடைமுறை அறிவு இல்லை. பீகாரின் வரலாறும் தெரியாது, புவியியலும் தெரியாது. சிறப்பு தீவிர திருத்தம் (SIR) எங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. நான் எனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கிறேன். கட்சி என்ன சொல்கிறது என்பது முக்கியமல்ல. இதுதான் உண்மை. உண்மையைச் சொல்ல முடியாவிட்டால், நான் ஏன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்?
பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
மூன்று மாதங்கள் கடந்துவிட்டன, இதுவரை அரசிடம் இருந்து பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இருப்பினும் ராணுவம் கூடுதல் நேரம் வேலை செய்து கொண்டே இருக்கிறது.