tamilnadu

img

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை மீண்டும் கொண்டு வருக

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும்  சட்டத்தை மீண்டும் கொண்டு வருக

சென்னை, செப். 6 - அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை தமிழ்நாடு அரசு மீண்டும்கொண்டு வர வேண்டும் என்று நீதியரசர் அரிபரந்தாமன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சைதாப்பேட்டை கிளையின் 14வது மாநாட்டையொட்டி ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்..!’ எனும் தலைப்பில் வெள்ளி யன்று (செப்.5) சைதாப் பேட்டையில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே இயற்றப் பட்டச் சட்டங்கள், உச்சநீதி மன்றத் தீர்ப்புகள், அர சமைப்புச்சட்ட அடிப்படைக் கோட்பாடுகள் ஆகிய வற்றிற்குப் பொருந்தும் வகையில் அனைத்துக் கோயில்களிலும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும். நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைப்படி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு டன், மூன்றாண்டு பட்டப் படிப்பும் தொடங்க வேண்டும். பயிற்சிப் பள்ளி களை விடுதி வசதிகளுடன் கூடிய கல்லூரிகளாக தரம் உயர்த்த வேண்டும். சான்றிதழ் படிப்பு, பட்டப் படிப்பின் தொடர்ச்சியாக 6 மாத காலம் நடைமுறைப் பயிற்சி வழங்க வேண்டும். இந்த பயிற்சிக் காலத்திற்கு குறிப்பிட்ட கோயில்களின் ஆகம் நடைமுறைகளையும் தமிழ் அர்ச்சனையையும் உள்ளடக்கிய பாடத்திட்டம் உருவாக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சிக்கான தனியார் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பாடத்திட்டம், பயிற்சி முறை உள்ளிட்டவை ஒரே வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும். அர்ச்சகர்கள் ஆலயத்தின் ஊழியர்கள். அரசின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஆகமங்கள் அறிந்து கொள்ள சமஸ்கிருதத்தி லிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அறிஞர்களைக் கொண்டு அவற்றை வரன்முறைப் படுத்த வேண்டும், நீதி மன்றங்களில் நிலுவையி லுள்ள அனைத்து வழக்கு களையும் விரைந்து முடிக்க வேண்டும், பயிற்சி பெற்ற அனைத்து சாதி அர்ச்ச கர்களுக்கும் பணி வழங்க வேண்டும், பணி இல்லா காலத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், அரசு பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கோவில்களில் பாகு பாடின்றி நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமுஎகச மாநிலப் பொரு ளாளர் சைதை ஜெ. முன்மொழிந்த இந்த தீர்மானத்தை வழி மொழிந்து பேசிய, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாண வர்கள் சங்கத்தின் தலை வர் வா.ரங்கநாதன் பேசு கையில், “பயிற்சி முடித்த மாணவர்களுக்கு அரசு வேலை வழங்காமல் உள்ளது. இதனால் பயிற்சிக்கு சேரும் மாண வர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரு வறை தீண்டாமையை ஒழிக்க அனைத்து கட்சி களும் குரல் கொடுக்க வேண்டும்” என்றார். கருத்துரையாற்றிய நீதி யரசர் து.அரிபரந்தாமன், “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். ஆகமம், ஆகமம் இல்லாத கோவில் என பிரிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்றார். “சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கொடுத்ததே தமிழன்தான். ஆகம விதிகளை தமிழி லிருந்து சமஸ்கிருதத்திற்கு மாற்றிவிட்டு மூலத்தை அழித்துவிட்டார்கள்” என்று சங்கத்தின் துணைத்  தலைவர் சிகரம் ச.செந்தில் நாதனும், “பிறப்பின் அடிப் படையில்தான் அர்ச்சகர் நியமிக்க வேண்டுமென்று எந்த ஆகமத்திலும் இல்லை” என்று மு.பெ.சத்தியவேல் முருகனாரும் கூறினர். தமுஎகச கிளைத் தலைவர் கி.கமலக் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஐ.சரத்குமார், கிளைச் செயலாளர் மு.சா., துணைத்தலைவர் சாய்சுரேஷ் ஆகியோர் பேசினர்.