காட்பாடியில் வாலிபர் சங்கம் ரத்ததான முகாம்
வேலூர், ஆக 3 - வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகர் டான் போஸ்கோ அரங்கில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற உள்ளதையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாலுகா தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மரியனாஸ், வெங்கடேசன், மூர்த்தி, மணி, சரத், அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் பெ.திலீபன் முகாமினை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ச.சூர்யா, மாவட்டக் குழு உறுப்பினர் நேதாஜி வாழ்த்தி பேசினர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் தீபக், ரத்த வங்கி அலுவலர் நந்தகுமார் சான்றிதழ்களை வழங்கினர். முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை தாலுகா செயலாளர் எல்.நவீன் மேற்கொண்டார். இதில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராம் பாலாஜி அகிஷ், பரத், ஆகாஷ் முதன்முறையாக ரத்ததானம் செய்தனர்.