தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் செப். 16, 17, 18, 19 ஆகிய 4 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது.