அமித் ஷா மக்கள் நலன் பற்றியே பேசமாட்டாரா
?” பருவநிலை மாற்றம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 மாதங்களாக விட்டு, விட்டு தொடர்ச்சியாக கன மழை பெய்து வரு கிறது. இந்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலை யின் அடிவார மாவட் டங்கள் மற்றும் மாரத் வாடா பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகள் மிக மோசமான அளவில் உருக் குலைந்துள்ளன. குறிப்பாக விவசாய நிலங்கள் குளங்களாக மாறிவிட்டன. இத்தகைய சூழலில், 4 நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநி லத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதற்கு “இந்தியா” கூட்டணி கட்சி யான சிவசேனா (உத்தவ்) கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ்வர்தன் சக்பால் சாம்னா நாளித ழுக்கு அளித்த பேட்டியில், “மகாராஷ்டி ராவில் வெள்ளம் மற்றும் கனமழை யால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் வேத னையில் உள்ளனர். ஆனால் அவர்களு க்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவோ அல்லது நிவாரண உதவிகள் குறித்தோ ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தனது உரையில் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அரசியல் விவகாரங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளைக் குறித்தும் மட்டும் பேசினார். மக்கள் நலன் பற்றி பேசவில்லை. மகாராஷ்டிராவில் அரசி யல் மாற்றம் குறித்தும், பிற கட்சிகள் குறித்தும் பேச நேரம் இருக்கும்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களு க்கு ஒன்றிய அரசின் ஆதரவு குறித்து ஏன் பேசவில்லை? இது மகாராஷ்டிரா மக்கள் மீது பாஜகவுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது” என அவர் கண்டனம் தெரிவித்தார்.
