அகற்றப்படாத குப்பையால் துர்நாற்றம்: கடலூர் மாநகர மக்கள் அவதி
கடலூர், செப்.21- கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் ஆங்காங்கே துர்நாற்றம் வீசி வருகிறது. கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளை கொண்டது. இதில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளர்கள்கள் பணி யாற்றி வந்தனர். இந்த மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி சிட்டி கிளீன் என்ற நிறுவனத்திற்கு தனியார் வசம் ஒப்படைக் கப்பட்டிருந்தது. தனியார் ஒப்பந்ததாரர்கள் சரியாக செயல்படாத காரணத்தினால் கடந்த மாதத்து டன் அவர்களது ஒப்பந்தத்தை மாநகராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றி ரத்து செய்தது. புதியதாக ஒப்பந்ததாரருக்கு இந்த பணி வழங்கப்பட்ட நிலையில், புதியதாக நிய மிக்கப்பட்டவருக்கு இதுவரையில் பணி ஆணை வழங்கப்படவில்லை. இதன் காரண மாக கடந்த 10 தினங்களுக்கும் மேலாக கடலூர் மாநகராட்சி முழுவதும் குப்பை அகற்றும் பணி நடைபெற வில்லை. 45 வார்டுகளுக்கும் நிரந்தர தொழிலா ளர்கள் 180 பேர் மட்டுமே உள்ள நிலையில் அவர்களால் மாநகராட்சி முழுவதும் குப்பை களை எடுக்க முடியவில்லை. இதனால் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் மலைபோல் குப்பை குவிந்துள்ளது. குப்பை அதிகம் உள்ள பகுதிகளில் தற்போது துர்நாற்றம் வீசி சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள் ளது. தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கடலூர் பகுதியில் ஏராளமான வர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகளுடன் கடலூர் அரசு, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராள மானோர் சென்று சிகிச்சை பெற்று வரு கின்றனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி பகுதியை சுகாதார பாதிப்பு இல்லாமல் நட வடிக்கை எடுத்து தூய்மையாக வைத்தி ருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலூர் மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணி யாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.