tamilnadu

img

61 நாட்கள் காத்திருப்பு போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி

61 நாட்கள் காத்திருப்பு போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சர் வாக்குறுதி 

மதுரை, அக்.18- தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை யில் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும்  ஓய்வு பெற்றோர் சார்பில் கடந்த ஆகஸ்ட்  18ஆம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 61 நாட்கள் தொடர்ந்து நடை பெற்றது. ஓய்வூதியம், மருத்துவப்படி, நிலு வைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்  டம், அரசு உறுதிமொழியுடன் வெற்றிகர மாக நிறைவடைந்தது. அக்.17 வியாழக்கிழமை தலைமைச்  செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் போக்குவரத்து அமைச்சர், போக்கு வரத்து செயலாளர், கழகத் தலைவர்கள், நம்பக நிதி அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தொழிற்சங்கத்தின் முக்கிய கோரி க்கைகள் குறித்து அரசு பல முக்கிய முடிவு களை எடுத்தது. இதையடுத்து, அரசு உறுதிமொழியின் அடிப்படையில் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 62வது நாளில் மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம்  (சிஐடியு) சார்பில் மண்டலத் தலைவர் டி. மாரியப்பன் தலைமையில் வெற்றிக் கூட்டம்  மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்கு வரத்து கழக தலைமையகம் முன்பு நடை பெற்றது. இதில் சம்மேளன உதவித் தலை வர் வீ.பிச்சை பேச்சுவார்த்தையில் எடுக்  கப்பட்ட முடிவுகளை விரிவாக விளக்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், மாவட்ட உதவித் தலைவர் ஜி. ராஜேந்திரன், மண்டல பொதுச் செயலாளர் பி.எம்.அழகர்சாமி, பொருளாளர் டி.  சிவக்குமார், ஓய்வுபெற்றோர் நலச்சங்க  பொதுச் செயலாளர் ஆர்.வாசுதேவன்,  தலைவர் எஸ்.அழகர், விரைவு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமை ப்பு மாநிலத் தலைவர் எம்.மகாலிங்கம், மதுரை கிளை செயலாளர் ஆர்.நாக ராஜன், பொருளாளர் மனோகரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றியை வாழ்த்திப் பேசினர். 61 நாட்கள் நீடித்த இந்தக் காத்திருப்பு போராட்டம், தொழிலாளர்களின் ஒற்றுமை யாலும், சிஐடியு மற்றும் சம்மேளனத்தின் உறுதியான தலைமையாலும் வெற்றிகர மாக நிறைவு பெற்றது.