திருவண்ணாமலையில் ஊராட்சி நூலகங்களை அமைக்க தமுஎகச வலியுறுத்தல்
திருவண்ணாமலை,ஆக. 20- திருவண்ணாமலையில் ஊராட்சி நூலகங்களை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் “களம் 28” என்ற பெயரில் முப்பெரும் நிகழ்வு கள் நடைபெற்றன. துணைத் தலைவர் இரா.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பெரணமல்லூர் சேகரன் எழுதிய “உங்கள் விருப்பம்” கவிதை நூல் வெளியீடு நடைபெற்றது. கவிஞர் தமிழ் ராசா நூலை வெளியிட, கவி ஞர் இளைய தமிழன் பெற்றுக் கொண்டார். சங்கத்தின் பொன்விழா நிறைவு குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் விளக்கமளித்தார். பெரண மல்லூர் கிளை மாநாட்டு அறிக்கையை செயலாளர் மா.கௌதம் முத்து சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவர் கவிஞர் முத்து நிலவன் சிறப்புரையாற்றி னார். இந்த நிகழ்வில் பெரணமல்லூர் கிளை நூலகத்திற்கு கட்டிடம் கட்டுதல், ஊராட்சி நூல கங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருதல், மக்கள் விரோத தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுதல், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு கிளையின் தலைவராக மாலவன், செயலாளராக கௌதம் முத்து, பொரு ளாளராக தேவதாஸ் தேர்வு செய்யப்பட்டனர்.