ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் முப்பெரும் விழா
சென்னை, அக். 17- சென்னை அருகே மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா, மின்சார மற்றும் மின்னணு பொறியாளர் தின விழா, புத்தாக்க திருவிழா ஆகிய முப்பெரும் விழா லியோமுத்து உள்விளை யாட்டு அரங்கில் நடை பெற்றது. கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமையிலும், புது தில்லி நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக் கழக வளாக இயக்குநர் டாக்டர் பிரேர்ணா கவுர் தலைமை விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்ச் சியை துவக்கி வைத்தனர். இதில் உரையாற்றிய கல்வி குழும தலைவர் சாய் பிரகாஷ், டாக்டர் கலாமின் "கனவு காணுங்கள், கனவு செயலில் இறங்கட்டும்; செயல் சாதனையாகட்டும்" என்ற கூற்றை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். சமூக நலனுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்கு விக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கல்லூரி முதல்வர் பழனி குமார், தகவல் தொழில் நுட்ப முதன்மை அதிகாரி நரேஷ்ராஜ், டீன் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு "பொறி யியல் அறிவை சமூக நலனுக்காகப் பயன்படுத்து வதே எங்கள் கடமை" என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
