மார்க்ஸ் நினைவிடத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமது மணிவிழா மற்றும் ‘ஜெய்பீம் 2.0’ நிகழ்ச்சிக்காக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு மாமேதை காரல் மார்க்சின் நினைவிடம் அமைந்துள்ள ஹைகேட் கல்லறைக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அந்தப் புகைப்படத்தை தமது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள தொல். திருமாவளவன் எம்.பி., “இன்று காலை லண்டனில் உள்ள தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அவர்களது கல்லறைக்குச் சென்று மரியாதை செய்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.