tamilnadu

கள்ளக்குறிச்சியில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்க ஒன்றிய அரசின் ஒப்புதல் கோரி திருமாவளவன் கடிதம்

கள்ளக்குறிச்சியில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்க ஒன்றிய அரசின் ஒப்புதல் கோரி திருமாவளவன் கடிதம்

கள்ளக்குறிச்சி, செப்.9 - உளுந்தூர்பேட்டையில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்க ஒன்றிய அரசுக்கு சொந்தமான இடத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு கொடுக்குமாறு விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட விமான ஓடு பாதை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத அந்த இடம் ஒன்றிய அரசின் பாது காப்புத்துறையின் கீழ் உள்ளது. அந்த கடிதத்தில் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளதாவது, “கள்ளக்  குறிச்சி மாவட்டம், உளுந்தூர்  பேட்டையில் உள்ள விமான நிலையம் தற்போது தஞ்சாவூர் விமான படைத்தளத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது.  சென்னை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய விமான நிலை யங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த இடத்தில் தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் ட்ரோன் தொழிற் பூங்கா, அதிநவீன விமான சோதனை ஆய்வகம் மற்றும் விமான பயிற்சிப் பள்ளி ஆகியவற்றை அமைக்க திட்ட மிட்டுள்ளது.” “இந்த திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படுவதோடு, தொழில்கள் மேம்படுத்தப்படும், புதிய முதலீ டுகளும் ஈர்க்கப்படும். இதனால் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சியடைவதோடு, இந்திய பாதுகாப்புத் துறைக்கும் உற்பத்தி வசதிகளை வழங்க முடியும். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது கணிசமான பங்களிப்பாக அமையும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புத் துறை நிலைக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் இந்த கடிதத்தை எழுதுவதாகவும், அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.