வடசென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!
சென்னை, அக். 24- கனமழைக்காரணமாக வடசென்னை யில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதால் இந்த நிலை உருவாகியுள்ளது. மணலி, மாதவரம், சோழிங்கநல்லூர் போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகமாக உள்ளது. சென்னை மாநகராட்சி நகரின் 1,132 கிலோமீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் களில் முதல் கட்டமாக தூர்வாரும் பணி களை முடித்துவிட்டது. ஆனால் ஒரு வடி காலில் இருந்து மற்றொரு வடிகாலுக்கு தண்ணீரை கொண்டு செல்லும் இணைப்பு கள் பல இடங்களில் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. ஜூலை மாதம் நகர் முழுவதும் 242 இடங்களில் வடிகால் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 25 சதவீத பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. மாதவரத்தில் உள்ள தனிகாச்சலம் நகரில் மாநகராட்சி இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பே 60 தெருக்களில் மழைநீர் வடி கால் அமைக்கும் பணியைத் தொடங்கியது. ஆனால் சில தெருக்களில் மட்டுமே பணி கள் முடிந்துள்ளன. இந்த வடிகால்களை முக்கிய வடிகால் அமைப்புடன் இணைக்கும் பணி இன்னும் செய்யப்படவில்லை. 2023-ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது இந்த பகுதியில் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியது. அன்னபூரணி நகர், பால கிருஷ்ணா நகர், கிருஷ்ணா நகர், செல்லை யா நகர் போன்ற பல தெருக்களில் சாதாரண மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இணைக்கும் பணிகள் முழுமையடை யாததால் நிலைமை மோசமாகியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரி விக்கின்றனர்.