ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் ததீஒமு விழுப்புரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
விழுப்புரம், ஆக.24- ஆணவ படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் விழுப்புரம் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. திண்டிவனத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஏ.சங்கரன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜானகிராமன் மாநாட்டைத் தொடங்கி வைத்து வைத்து பேசினார். மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு நிறைவுரையாற்றினார். தீர்மானம் இம்மாநாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை புகார்களின் மீது காவல்துறை விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். திண்டிவனம் வட்டம், மேல்பாக்கம் கிராமத்தில் அடை யாளம் காணப்பட்ட பஞ்சமி நிலங்களை உடனடியாக பட்டியலின மக்களுக்கு ஒதுக்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையார்பட்டு, சாத்தனூர் கிராமங்களில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் இந்த மாநாட்டில் 25 பேர் மாவட்ட குழுவின் மாவட்டத் தலைவராக எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலாளராக வழக்கறிஞர் எம்.கே.முருகன், மாவட்டப் பொருளாளராக ஏ.ஜான் பாஸ்கோ ஆகி யோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.