சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் தீஒமு வடசென்னை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
சென்னை, ஆக. 3- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் வடசென்னை மாவட்ட 5ஆவது மாநாடு பெரம்பூர் கொடுங்கையூரில் யூ.கே. சிவஞானம் நினைவரங்கில் ஞாயிறன்று (ஆக. 3) நடைபெற்றது. தலைவர் எம்.ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மா.பூபாலன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் வி.ஜானகிராமன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வீ.ஆனந்தன் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். சென்னை வானியல் மன்றம் தலைவர் முனைவர் கு.ரவிக்குமார் “இந்தியாவில் சாதியும் அறிவியல் பார்வையும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாநில சிறப்பு தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக எம்.முத்து வரவேற்றார். துணைத்தலைவர் அ.செம்மல் நன்றி கூறினார். முன்னதாக எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் பேரணி யாகச் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தீர்மானங்கள் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும், மலக்குழி யில் மனிதன் இறங்குவதை தடுக்கும் வகையில் நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும், நிலமற்ற தலித் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்க வேண்டும், பஞ்சமி நிலங்கள் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், தீண்டாமை கொடுமைகளை தடுக்க அரசு விழிப்புணர்வு பிரச்சாரங் களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிர்வாகிகள் தேர்வு தலைவராக வி.ஜானகிராமன், செய லாளராக எம்.ராஜ்குமார், பொருளாளராக வீ.ஆனந்தன் உள்ளிட்டு 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.