tamilnadu

img

இந்திய மக்களின் ஆதரவு கியூபா போராட்டத்திற்கு வலுசேர்க்கும்

இந்திய மக்களின் ஆதரவு கியூபா போராட்டத்திற்கு வலுசேர்க்கும்

சென்னையில் கியூபா தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் பேச்சு

சென்னை, ஆக.17 - இந்திய மக்களின் ஆதரவும் நிதியுதவி யும் புரட்சிகர கியூபா அரசை பாதுகாக்க நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என்று இந்தி யாவிற்கான கியூபா தூதர் யுவான் கார்லோஸ் மார்சன் கூறினார். “சோசலிச கியூபாவை பாது காப்போம், ஏகாதிபத்திய சதிகளை முறி யடிப்போம்” என்ற முழக்கத்தோடு கியூபா  ஒருமைப்பாட்டு விழா மற்றும் பிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு தொடக்க விழா கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்றது.  கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் பேசிய கார்லோஸ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதற்கும், சிபிஎம் பொதுச்செயாலாளர் எம்.ஏ.பேபி  அழைப்பு விடுத்ததற்கும் நன்றி தெரி வித்தார்.  “தமிழ்நாட்டிற்கு முதல்முறை யாக வருகை தந்துள்ளேன். பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டை கொண்டா டும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது மிகவும் பெருமையாக உள்ளது” என்றார்.

இந்திய ஆதரவின் முக்கியத்துவம்

“நீங்கள் அளித்துள்ள நிதி ஏகாதி பத்தியத்திற்கு எதிராக போராடி வரும் கியூப மக்களுக்கு பெரிதும் உதவும். உண வுப்பொருட்கள், மருந்து பொருட்கள், பல்வேறு சாதனங்கள் என பல வகை யிலும் இந்திய மக்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்த நிதி எங்களது நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க கியூபா பொது சுகாதாரத்துறைக்கு பெரிதும் பயன்படும்” என்றார். மேலும் அவர் பேசியதாவது:

பிடல் காஸ்ட்ரோவின் போராட்டம்

பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்து, மக்களின் ஏழ்மையான சமூக நிலை மையை நன்கறிந்திருந்தார். ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு பயின்று, மாணவர் பருவத்திலேயே அரசிய லில் ஈடுபட்டார். 1952ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியை கைப்பற்றிய பின், 1953 ஜூலை 26ல் மன்கடா ராணுவமுகாமின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். கைது செய்யப்பட்டு மெக்சிகோவிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகு, புரட்சியாளர்களை ஒன்று திரட்டி சிறிய கப்பல் மூலம் கியூபா வந்து பாடிஸ்ட்டா அரசை வீழ்த்தி இறையாண்மை மிக்க சோசலிச குடியரசை நிறுவினார்.

அமெரிக்க எதிர்ப்பு

“700க்கும் மேற்பட்ட கொலை முயற்சிகளில் இருந்து பிடல் உயிர் தப்பியுள்ளார். கடந்த 60 ஆண்டுகளில் கியூபா நாட்டை சீர்குலைக்கவும் அரசை கவிழ்க்கவும் ஏராளமான சதி திட்டங்கள் தீட்டப்பட்டன. அனைத்தையும் நாங்கள் முறியடித்தோம். அமெரிக்காவில் இருந்து 90 மைல் தொலைவில் உள்ள ஒரு நாடு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்க முடியும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ள நாடு கியூபா.”

பொருளாதார தடைகள்

“கியூபா மீது அமெரிக்கா தொடுத்துள் ளது பொருளாதார போர். கடந்த 60  ஆண்டுகளாக நீடிக்கும் பொருளா தார தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டி ருந்தாலும், இந்த நிலை தொடர்ந்து நீடிக்காது என்ற நம்பிக்கை உள்ளது. டிரம்ப் முதல் ஆட்சிக்காலத்தில் 243 தடைகளை விதித்தார். இரண்டாவது ஆட்சிக்காலத் தில் 25க்கும் மேற்பட்ட கடுமையான தடை களை கொண்டு வந்தார். கியூபாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. இது நியாய மற்றது. மாறாக அமெரிக்காவின் மண்ணில் இருந்து ஏவிவிடப்படும் பயங்கரவாத தாக்குதலில் கடந்த 60 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள நாடுதான் கியூபா. மியாமியில் புளோரிடாவில் ஒரு சிறிய குழு கியூபாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா அந்த குழுவுக்கு நிதி உதவி செய்து வருகிறது.”

உலக ஆதரவு

கியூபா மீதான பொருளாதார தடை களை நீக்கக்கோரி அக்டோபர் மாதம்  ஐநா பொதுசபையில் மேலும் ஒரு  தீர்மானத்தை முன்மொழிய உள்ளோம். கடந்த 25 ஆண்டுகளாக இந்த தீர்மானத் திற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு உலகில் இரண்டே நாடுகள் தான் ஆதர வாக உள்ளன - இஸ்ரேல் மற்றும் உக்ரைன். “இந்திய மக்கள் அளித்துள்ள நிதியுதவி, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இடைவிடாது போராடி வரும் கியூபா மக்களின் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும். இந்திய கியூபா மக்கள் ஒற்றுமை நீடூழி வாழ்க! பிடல் காஸ்ட்ரோவின் புகழ் ஓங்குக! வாழ்க கியூபாவின் புகழ்!” இவ்வாறு சிறப்புத்  தூதர் பேசினார்.