காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையில் அறுவடைக்கு இருந்த நெல் பயிர் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்தால் சேதாரத்தின் அளவு இன்னும் கூடும் என அஞ்சப்படுகிறது. செம்பரம்பாக்கம், கம்மவார் பாளையம், முசரவாக்கம் உள்ளிட்ட கிராமங்களிலும் அனைத்து வட்டங்களிலும் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை கணக்கு எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க மாவட்ட ஆட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளர் என்.சாரங்கன், சிபிஎம் மாவட்டச்செயலாளர் நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.
